அடக்கொடுமையே! சாண்டி இப்படிப்பட்டவரா? உண்மை முகத்தை அம்பலப்படுத்திய பிக்பாஸ்!! வைரலாகும் ஷாக் வீடியோ!!bigboss promo 3 released

பிக்பாஸ் சீசன் 3 கமல்ஹாசன் தொகுத்து வழங்க வெற்றிகரமாக 100 நாட்களை கடந்துள்ளது. இந்நிலையில் யார் அந்த பட்டத்தை வெல்லப் போகிறார் என்று ஆவலுடன் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது சாண்டி, லாஸ்லியா, முகேன் மற்றும் ஷெரின் மட்டுமே இறுதிக்கட்டத்தில் உள்ளனர்.  

மேலும் இந்த வாரத்துடன் பிக்பாஸ் சீசன் 3 முடிவடையுள்ளதால் போட்டியாளர்களை மகிழ்விக்கும் வகையில் பிக்பாஸ் தொடர்ந்து விருந்தினர்களை உள்ளே அனுப்பி வருகின்றனர். அதன்படி நேற்று வனிதா, சாக்‌ஷி, கஸ்தூரி, சேரன், அபிராமி ஆகியோர் விருந்தினர்களாக உள்ளே சென்றனர்.

Sandyஅதனை தொடர்ந்து இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் தொகுப்பாளினி பிரியங்கா, ரியோ. மாகாபா, ரக்ஷன் மற்றும் தாடி பாலாஜி ஆகியோர் உள்ளே சென்று போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும்வகையில் கேள்விகளை கேட்டுள்ளனர். 

அப்பொழுது பேசிய சாண்டி பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தால் நமது மறுமுகத்தை பார்க்கலாம். நான் சண்டையை தூரம் நின்றே ரசித்து பார்த்து கிண்டல் செய்வேன். சண்டையில் ஈடுபடமாட்டேன். எனக்கு எப்பொழுதும் கலகலப்பாக இருக்கவேண்டும் என கலகலப்பாக கூறியுள்ளார். இந்த பிரமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.