சினிமா பிக்பாஸ்

திடீரென மயங்கி விழுந்த முக்கிய போட்டியாளர்! பதற்றத்தில் மூழ்கிய பிக்பாஸ் வீடு.! வைரலாகும் ஷாக் வீடியோ!!

Summary:

bigboss new promo released

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் மிகவும் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும்  நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் பிக்பாஸ் என்றாலே சர்ச்சைகளுக்கும் சண்டைகளுக்கும் எப்பொழுதுமே பஞ்சம் இருக்காது. அதேபோல பிக் பாஸ் சீசன் மூன்றிலும் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. மேலும் நாளுக்கு நாள் சண்டைகள் அதிகமாகிக்கொண்டே மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. மேலும் 43 நாட்கள் முடிந்துள்ள நிலையில் இதுவரை 5 பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு யாரும் எதிர்பாராத வகையில் பருத்திவீரன் சித்தப்பு சரவணனை பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றியுள்ளார் பிக்பாஸ்.இதனால் போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவருக்கும் கடினமான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் மதிப்பெண்களை பெற வேண்டும் என்பதற்காக போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் கடுமையாக விளையாடி வருகின்றனர்.

 போட்டி மிகவும் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருந்த நிலையில் இயக்குனர் சேரன் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.  இந்நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் பதறிபோய் உள்ளனர். மேலும் இதுகுறித்த பிரமோ வீடியோ வெளியாகி வைரலான நிலையில் சேரனுக்கு என்ன ஆனது என ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.


Advertisement