சினிமா

பவானி, அபினய்யை சந்தேகபடுறீங்களே, அப்போ அவங்க உறவை என்னனு சொல்வீங்க! கடுப்பான பிக்பாஸ் பிரபலம்!!

Summary:

பவானி, அபினய்யை சந்தேகபடுறீங்களே, அப்போ அவங்க உறவை என்னனு சொல்வீங்க! கடுப்பான பிக்பாஸ் பிரபலம்!!

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. முந்தைய சீசன்களை விட இந்த சீசனில் மோதல், வாக்குவாதங்கள், சண்டைகள் என எதற்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டுள்ளது. ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்கள் மத்தியில் காதல் பிறக்கும். அது நிகழ்ச்சி முடிந்த பிறகு காணாமல் போய்விடும்.

ஆனால் தற்போதைய சீசனில் அதுபோன்று எந்தக் காதலும் இல்லை. இந்நிலையில் திருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில் அபினய் மற்றும் பாவனிக்கு இடையே காதல் என்பது போல போட்டியாளர்கள் புதிய சர்ச்சையை கிளப்பி வருகின்றனர். மேலும் இதுகுறித்து ராஜு நேரடியாகவே, அபினய்யிடம், ‘நீ பாவனியை லவ் பண்றியா’ என கேட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் நேற்று டாஸ்க்கில் சிபியும்,  அபினய்க்கும் பாவனிக்கும் இடையே இருப்பது நட்பும் இல்லை. காதலும் இல்லை. அந்த உறவு பற்றி யாருக்கும் புரியவில்லை என கூறினார். அதற்கு போட்டியாளர்கள் சிலர் ஆம் என பதிலளித்தனர். இந்நிலையில் இன்று வெளியான ப்ரமோ வீடியோவில் பாவனி இதுகுறித்து கேட்டு ராஜு மற்றும் சிபியுடன் சண்டை போடுகிறார். இதனைக் கண்ட பலரும் பாவனிக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

இந்நிலையில் அந்த வீடியோவிற்கு பிக்பாஸ் வீட்டிலிருந்து சில வாரங்களுக்கு முன்பு வெளியேறிய மதுமிதா, பவானி, அபினய்யிடம் மணிக்கணக்காக பேசுகிறார் என்பதால் அவர்களின் உறவை நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள் என்றால், ராஜு மற்றும் அண்ணாச்சியும்தான் மணிக்கணக்கில் பேசுகின்றனர். அவர்களது உறவை என்னவென்று கூறுவீர்கள். இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்களா? என கேள்வி எழுப்பி கமெண்ட் செய்துள்ளார்.

 


Advertisement