சினிமா

பிக்பாஸ் ஐஸ்வர்யாவின் காதலன் இவ்வளவு மோசமான ஏமாற்றுக்காரனா? அம்பலமான ரகசியம், ஐஸ்வர்யா கூறிய விளக்கம்.!

Summary:

bigboss ishwarya lover is a cheating person

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சி பிக்பாஸ் 2 . இதில் பங்கேற்ற போட்டியாளர்களும் ஒருவரான  ஐஸ்வர்யா தனது இடது கையில் கோபி என்ற பெயரை பச்சை குத்தியிருந்தார்.

மேலும் பிக்பாஸ் வீட்டில் பல நேரங்களில் கோபியை பற்றி ஐஸ்வர்யா யாசிகாவிடம் பேசியுள்ளார். மேலும் எப்பொழுதும் கோபி தான் நான் இங்கு வந்ததற்கு முக்கிய காரணம். அவர் இல்லை என்றால் நான் வந்திருக்க மாட்டேன். எனவே அவருக்கு தான் என் முதல் நன்றி என்று அடிக்கடி தெரிவித்துள்ளார்.

மேலும் நிகழ்ச்சியில் ஒரு டாஸ்க்கில் தங்களுக்கு விருப்பமானவர்களிடம் போனில் பேசும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.அப்பொழுதும் ஐஸ்வர்யா கோபியிடம்தான் பேசினார். 

இந்நிலையில் கோபி என்ற கோபி கிருஷ்ணன் கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களுக்கு குறைந்த வட்டிக்கு பணம் கொடுப்பதாக கூறி மக்களிடம் பல லட்சம் ரூபாயை முன்பணமாக வாங்கி பல பேரை ஏமாற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டு கோபி சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த மோசடியில் ஐஸ்வர்யாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஐஸ்வர்யா சமீபத்தில் அளித்த பேட்டியில் இது குறித்து கூறியதாவது, ‘‘நான் எனது கை விரலில் பச்சை குத்தியிருப்பது நான் காதலித்த கோபியின்  பெயர்தான். ஆனால் அப்பொழுது அவரது  சொந்த வாழ்க்கை பற்றியும், மோசடி பற்றியும் எனக்குத் தெரியாது. ஒருநாள் அந்த விஷயங்கள் எல்லாம் எனக்குதெரியவந்ததும் நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். மேலும் அந்த காரணத்தினால் நான் அவரை விட்டு பிரிந்து விட்டேன்’" என்று ஐஸ்வர்யா கூறியுள்ளார்.
 


Advertisement