சினிமா

அடேங்கப்பா! முதல் நாளே இப்படியா? வெளியான வீடியோவால் ஷாக் ஆன ரசிகர்கள்!!

Summary:

bigboss first day video leaked

தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த போட்டியில் இரண்டு சீசன்கள் நிறைவுற்ற நிலையில் பிக்பாஸ் மூன்றாவது சீசன் நேற்று கோலாகலமாக துவங்கியுள்ளது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.

பிக்பாஸ் முதல்  சீசன் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாவது சீசன் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் நேற்று ஆரம்பமான இந்த பிக்பாஸ் சீசன் 3ல் பல முக்கிய பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். இதனால் ரசிகர்கள் பெரும் ஆச்சரியம் கலந்த உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ன களேபரங்கள் நடைபெறவுள்ளது என மிக ஆவலாக எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் நிகழ்ச்சி துவங்கி முதல் நாளிலேயே, பல நாட்கள் ஆனது போல போட்டியாளர்கள் அனைவரும் மிகவும் ஆரவாரத்துடன் நடனமாடி உற்சாகத்துடன் இருந்த வீடியோ பிரமோ ஒன்று இன்று வெளியாகியுள்ளது. 


Advertisement