வாத்தி கம்மிங்.. செம க்யூட்டாக குத்தாட்டம் போட்ட குக் வித் கோமாளி பிரபலங்கள்! வீடியோ இதோ!!

வாத்தி கம்மிங்.. செம க்யூட்டாக குத்தாட்டம் போட்ட குக் வித் கோமாளி பிரபலங்கள்! வீடியோ இதோ!!


bigboss-contestants-dance-for-vaathi-coming-song

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, ஏராளமான நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதில் திறமையை ஊக்குவிக்கும் வகையிலும், ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையிலும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு காரணம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகள் செய்யும் சேட்டைகள் தான்.

இந்த நிலையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 2 வில் அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகிலா, கனி, பவித்ரா லட்சுமி ஆகியோர் போட்டியாளர்களாக உள்ளனர். மேலும் கோமாளிகளாக புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை, சுனிதா, சரத், ஆகியோர் கோமாளிகளாக ரகளை செய்து வருகின்றனர்.

அதிலும் அண்ணன் தங்கை என புகழும், ஷிவாங்கியும் செய்யும்  கூத்துக்கள் வேற லெவல். மேலும் மணிமேகலையின் ரகளைகள் பார்ப்போரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். இந்த நிலையில் அஸ்வின், ஷிவானி, சக்தி மற்றும் மணிமேகலை ஆகியோர் தளபதியின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய கியூட்  வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.