சினிமா

ரித்விகாவிற்கு ஊபர் கார் டிரைவரால் நேர்ந்த தொல்லை.! புகைப்படத்துடன் அவரே வெளியிட்ட அதிர்ச்சிப் பதிவு!!

Summary:

bigboss complaint on uber driver

தற்காலத்தில் பல முக்கிய நகரங்களில் ஊபர், ஓலா போன்ற கார் சேவை மையங்கள் பெருமளவில் இயங்கி வருகிறது. மேலும் பணிபுரிவோர், பெண்கள் உட்பட அனைவரும் இதனையே பெருமளவில் நாடி வருகின்றனர்.  இந்நிலையில் அத்தகைய சேவை மையங்கள் மீதும்,  ஓட்டுனர்கள் மீதும் அடிக்கடி புகார்கள் எழுந்து வருவது வழக்கமாக உள்ளது.

 இந்நிலையில் மெட்ராஸ்  திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை ரித்விகா. அதனைத் தொடர்ந்து அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிக்பாஸ் பட்டத்தை  வென்றதன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மேலும் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

ridvika க்கான பட முடிவு

 இந்நிலையில் இவர் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஊபர் டிரைவர் ஒருவர் குறித்து புகார் ஒன்றை அளித்துள்ளார்.  அதில் ஊபரில் பாதுகாப்பு இல்லாத பயணம். ஊபர் டிரைவர் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார். மேலும் காரின் நிலையும் மிக மோசமாக இருந்தது என கார் நம்பர் மற்றும் கார் ஓட்டுநரின் விவரங்களை வெளியிட்டுள்ளார். 

இந்நிலையில் இந்த பதிவு வைரலான நிலையில் இதற்கு பல ரசிகர்கள் ஆதரவும், பலர் சாலை சரியில்லாமல் இருக்கலாம், மேலும் இவரது ரேட்டிங் நன்றாக உள்ளது. இவ்வாறு தேவையில்லாமல் குறைகூறி ஒரு டிரைவரின் வாழ்க்கையை பாழாக்காதீர்கள் என்பது போன்ற பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். 


Advertisement