சினிமா பிக்பாஸ்

அனைத்தும் நாடகம்! மொத்தத்தையும் போட்டுடைத்த பிக்பாஸ் சேரன்!

Summary:

bigboss cheran talk about kavin and losliya


பிக்பாஸ் சீசன் மூன்று 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு, மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். தற்போது போட்டியாளர்களாக கவின், லாஸ்லியா, சாண்டி, ஷெரின், முகென், தர்ஷண், வனிதா ஆகியோர் இருக்கிறார்கள்.

கடந்த வாரம் சீக்ரட் ரூமில் அடைக்கப்பட்ட சேரன் தற்போது மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வர பலருக்கும் சந்தோசம் ஏற்பட்டது. இதனையடுத்து அனைவரிடமும் உரையாட தொடங்கினார்.

பின் ஷெரின், வனிதாவிடம் பேசும் போது எல்லோரும் நன்றாக கேம் விளையாடுகிறார்கள், வனிதாவும் நானும் தான் பின் தங்கியிருக்கிறோம். நாமினேசன் ரூமில் கவின் ஷெரினை நாமினேட் செய்த காரணம், ஷெரின் தான் தானாக வந்து தர்ஷணிடம் பேசுகிறார் என கூறியதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து லாஸ்லியா-கவினுக்கு சேரன் மீதுள்ள பொறாமை குறித்து வனிதாவிடம் பேசியதை வனிதா சேரனிடம் கூறியுள்ளார். அப்போது சேரன், லாஸ்லியாவை கவின் மைண்ட் ஹராஸ்மெண்ட் செய்து கட்டாய நிலைக்கு தள்ளுகிறார் என கூறுகிறார். 

இரண்டாம் வாரம் முதலே நான் உன் பின்னால் தான் இருக்கிறேன் என லாஸ்லியா கூறியதை சுட்டிக்காட்டி எனக்கு அப்போதே சந்தேகமாகிவிட்டது. இருவரும் அழகான காதல் படம் போல வெளியில் காட்டிக்கொண்டிருக்கிறார்கள் என அவர்கள் நடத்தும் பல நாடகங்களை போட்டுடைத்துள்ளார்.


Advertisement