சினிமா

பாவனி மீது காதலா? முத்தம் கொடுத்தது ஏன்? முதன்முதலாக மனம் திறந்த பிக்பாஸ் அமீர்!!

Summary:

பாவனி மீது காதலா? முத்தம் கொடுத்தது ஏன்? முதன்முதலாக மனம் திறந்த பிக்பாஸ் அமீர்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வந்த நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 5. இதில் பல்வேறு துறையைச் சேர்ந்த 18 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். அவ்வாறு வைல்ட் கார்டு எண்ட்ரியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் டான்ஸ் மாஸ்டர் அமீர்.

அமீர் மிகவும் திறமையாக பிக்பாஸ் கொடுத்த அனைத்து டாஸ்க்குகளையும் செய்தார். மேலும் கடந்து வந்த பாதை டாஸ்கில் அமீர் கூறிய கதையை கேட்டு பலரும் கண்கலங்கினர். அமீர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது சக போட்டியாளரான பாவனியிடம் நெருக்கம் காட்டி வந்தார். மேலும் அவர் பாவனிக்கு முத்தம் கொடுத்த காட்சி வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சமீபத்தில் அமீர் அளித்த பேட்டியில் இதுகுறித்து கேட்ட போது அவர், நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உள்ளே செல்லும் போது பாவனி மட்டும் தனியாக உட்கார்ந்து அழுது கொண்டிருப்பார். எல்லா பிரச்சனையிலும் அவர் தனியாக இருப்பதை பார்க்கும்போது பாவமாக இருந்தது. அதனால் அவரிடம் நான் பேசுவேன். அப்படித்தான் எங்களுக்குள் நட்பு உண்டானது. அதற்குப் பிறகு நான் வெளிப்படையாக பாவனியை காதலிப்பதை சொல்லினேன். ஆனால், அவர் நட்பாக இருக்கலாம் என்று கூறினார். அது அவரது விருப்பம்.

அந்த முத்தக்காட்சியை குறித்து சமூக வலைதளங்களில் பலரும் பல்வேறு கருத்துக்களை கூறிவருகின்றனர். மேலும் நான் அவருக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்ததாக கூறுகின்றனர். ஆனால் அப்படி கொடுத்திருந்தால் கண்டிப்பாக பிரச்சினை ஏற்பட்டு இருக்கும். நான் கொடுக்கும் போது அவர் எதுவும் சொல்லவில்லை, தடுக்கவும் இல்லை. அப்போது இருக்கும் மனநிலையில் என் காதல் உணர்வில் கொடுத்துவிட்டேன். எனக்கு அது தவறாக தெரியவில்லை. அதனை ஏன் இப்படி பெரிதாக பேசி சர்ச்சை ஆக்குகிறீர்கள்? என்றுதான் தெரியவில்லை என கூறியுள்ளார்.


Advertisement