கவினுடன் மீண்டும் காதலில் விழுந்தாரா லாஸ்லியா - வெளியான வீடியோவால் பரபரப்பு!



Big boss lasliya again loved kavin

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கடந்த இரண்டு சீசன்களை தொடர்ந்து மூன்றாவது சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். சீசன் மூன்று ஆரம்பத்தில் இருந்தே சண்டை, சர்ச்சைகளுடன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

மொத்தம் 16 பிரபலங்கள் போட்டியாளராக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன்,சாக்‌ஷி ஆகியோர் கடந்த நாட்களில் வெளியானர். அதனை தொடர்ந்து வைல்டுக்கு கார்டு எண்ட்ரியாக நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்கு வந்தார்.

பின்னர் விருந்தினராக வனிதா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அவர் வந்ததுமே  பல பிரச்சினைகள் வெடித்து வீடே இரண்டானது. இந்நிலையில் கடந்த வாரம் அபிராமி குறைந்த ஓட்டுக்களை பெற்று வெளியேறியநிலையில், தற்கொலை முயற்சி மேற்கொண்டதற்காக நடிகை மதுமிதா வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அதனால் பெரும் பரபரப்பு நிலவியது.

இந்நிலையில் தற்போது வந்த ப்ரோமோவில் லாஸ்லியா கவினை பார்த்து எனக்கு உன்னை பிடிக்கும் ஆனால் இப்போது அதிகம் பிடிக்கும் என்று அவரை பற்றி மிகவும் பெருமையாக பேசுகிறார்.

இதனை பார்த்த மக்கள் என்ன இது மீண்டும் கவினுடன் காதல் வலையில் விழுந்து விட்டாரா லாஸ்லியா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.