நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறதா ஜெயம் ரவியின் இந்த திரைப்படம்! வெளியான தகவலால் செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறதா ஜெயம் ரவியின் இந்த திரைப்படம்! வெளியான தகவலால் செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!


bhoomi-movie-going-to-released-in-ott

கொரனோ அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ரிலீசுக்கு தயாராக உள்ள பல படங்களும் ஓடிடி தளத்தில் வெளியாகி வருகிறது. மேலும் ஏற்கனவே ஜோதிகா நடிப்பில் வெளிவந்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பென்குயின், நடிகை வரலட்சுமியின் டேனி, வைபவ் நடிப்பில் உருவான லாக்கப்  போன்ற திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியானது. 

அதனை தொடர்ந்து விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் மற்றும் அனுஷ்காவின் சைலென்ஸ் போன்ற படங்கள் வரும் அக்டோபர் 2-ந்தேதியும், சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரை போற்று அக்டோபர்  30-ந்தேதியும் ஓ.டி.டி.யில் வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது ஜெயம்  ரவியின் பூமி திரைப்படமும் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Jayam ravi

ரோமியோ ஜூலியட், போகன்  போன்ற திரைப்படங்களை இயக்கிய லட்சுமண்  இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பூமி. இது ஜெயம்  ரவியின் 25வது படமாகும். இதில் ஜெயம் ரவிக்கு  ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் அவர்களுடன் சரண்யா பொன்வண்ணன், சதீஷ், தம்பி ராமய்யா போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் விவசாயத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள பூமி படத்தை நேரடியாக ஓடிடி  தளத்தில் வெளியிட முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.