வாவ்.. பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை சவுந்தர்யாவா இது! மாடர்ன் உடையில் எப்படி இருக்காரு பார்த்தீர்களா!!

வாவ்.. பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை சவுந்தர்யாவா இது! மாடர்ன் உடையில் எப்படி இருக்காரு பார்த்தீர்களா!!


bharathi-kannamma-sowndarya-in-modern-dress

விஜய் தொலைக்காட்சி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. நாளுக்குநாள் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டிருக்கும் இந்த தொடரில் பாரதியாக அருண் பிரசாத்தும், கண்ணம்மாவாக ரோஷினி ஆகியோரும் நடித்துவருகின்றனர்.

இந்த தொடரில் ஹீரோ பாரதியின் அம்மாவாக, கண்ணம்மாவின் மாமியாராக சவுந்தர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்தான்  நடிகை ரூபா ஸ்ரீ. இவர் தமிழ் சினமாவில் ஏராளமான திரைப்படங்களில் ஹீரோயினாகவும், முக்கிய காதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள இவர் மலையாளத்திலும் பல்வேறு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் பாரதி கண்ணம்மா தொடரில் ஆரம்பத்தில் பயங்கர திமிரான கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், தற்போது இனிமையான மாமியாராக நடித்து வருகிறார். இந்நிலையில் தொடரில் இவரை முழுவதும் புடவையில் பார்த்திருப்போம். இந்த நிலையில் அவர் மாடர்னாக உடையணிந்து எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தெப்போது தீயாய் இணையத்தில் பரவி வருகிறது.