சினிமா

என்னது.. இந்த பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலம் படத்தில் நடிச்சுருக்காரா! வாவ்.. ஹீரோ யாருன்னு பார்த்தீர்களா!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் பாரதி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் பாரதி கண்ணம்மா. நாளுக்கு நாள் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

பாரதி கண்ணம்மா தொடரில் ஹீரோவாக பாரதி கதாபாத்திரத்தில் அருண் பிரசாத் மற்றும் ஹீரோயினான கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் ரூபாஸ்ரீ, ரிஷி, அகிலன், ஸ்வீட்டி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.  இந்த தொடரில் பாரதியின் தம்பியாக நடித்துவரும் அகிலன் ஒரு மாடல் ஆவார். இவர் பிரபுதேவாவின் படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பஹீரா. இத்திரைப்படத்தில் அகிலன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அகிலன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், பஹீரா படத்திற்கான தனது டப்பிங் பணியை நிறைவு செய்துள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.


Advertisement