என் ஆசை நிறைவேறிருச்சு.. சின்னப்பிள்ளை போல பாரதிகண்ணம்மா நடிகை செய்யும் காரியத்தை பார்த்தீங்களா! தீயாய் பரவும் வீடியோ!!Bharathi kannamma roshini video viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நாளுக்கு நாள் சுவாரஸ்யமாகவும் மிகவும் விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கும் தொடர் பாரதி கண்ணம்மா. இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் இந்த சீரியலுக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். 

பாரதி கண்ணம்மா  தொடரில் கண்ணம்மா என்கிற கதாபாத்திரத்தில் காதநாயகியாக நடித்து வருபவர் ரோஷினி.  மாடலிங் துறையை சேர்ந்த இவர்  இத்தொடரில் எந்த ஒரு கவர்ச்சியும், ஆடம்பரமும் இல்லாமல் நடித்துவருகிறார். இவரின் நடிப்பு ரசிகர்களால் பெருமளவில் பராட்டப்பட்டது.

சீரியல், மாடலிங் என ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும்  ரோஷினி சமூக வலைத்தளங்களிலும்  ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்  இந்நிலையில் அவர் தற்போது மால்களில் பொருட்களை எடுக்க பயன்படுத்தப்படும் டிராலியில் உட்கார்ந்து செல்வது போன்ற வீடியோவை வெளியிட்டு எனது நான் சின்ன வயதிலிருந்தே இப்படி செல்ல வேண்டும் என ஆசைப்பட்டேன். அது நிறைவேறிவிட்டது என உற்சாகத்துடன் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.