வாவ்.. செம கியூட்! புத்தாண்டு ஸ்பெஷலாக பாரதி கண்ணம்மா ரோஷினி வெளியிட்ட புகைப்படம்! குவியும் லைக்ஸ்கள்!!

வாவ்.. செம கியூட்! புத்தாண்டு ஸ்பெஷலாக பாரதி கண்ணம்மா ரோஷினி வெளியிட்ட புகைப்படம்! குவியும் லைக்ஸ்கள்!!


Bharathi kannamma roshini photoshoot viral

விஜய் தொலைக்காட்சியில் நாளுக்கு நாள் சுவாரசியங்களுடன், விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா. இந்த தொடரில் கண்ணம்மாவாக, ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ரோஷினி ஹரிபிரியன். இந்த தொடரில் இவரது எதார்த்தமான நடிப்பு பலரையும் கவர்ந்தது. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். 

இந்த நிலையில் திடீரென சில காலங்களுக்கு முன்பு ரோஷினி பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகினார். சினிமாவில் நடிக்க அவருக்கு அதிக வாய்ப்புகள் வந்ததால் அவர் தொடரை விட்டு விலகியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் ரோஷினி அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுவார். இந்த நிலையில் தற்போது அவர் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.