அட.. அவரா இது! முன்னணி நடிகையுடன் திருமண கோலத்தில் இருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்!! ஷாக்கான ரசிகர்கள்!bharathi-kannamma-akilan-with-kajal-photo-viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் பாரதி கண்ணம்மா. நாளுக்கு நாள் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஒவ்வொரு நாளும் தவறாமல் இத்தொடரை பார்த்து வருகின்றனர்.

பாரதிகண்ணம்மா தொடரில் ஹீரோவான பாரதி கதாபாத்திரத்தில் அருண் பிரசாத் மற்றும் ஹீரோயினான கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் ரூபாஸ்ரீ, ரிஷி, ஸ்வீட்டி, அகிலன் என  பிரபலங்களும் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

bharathi kannamma

இந்த தொடரில் பாரதியின் தம்பியாக நடித்துவரும் அகிலன் ஒரு மாடல் ஆவார். இவர் சினிமா துறையில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வாலுடன் திருமண கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் விளம்பர படத்தின் போது எடுக்கப்பட்டதாகும். அதில் அகிலனும் நடித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.