"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
என்னது?.. பாரதி செத்துட்டாரா?.. அடுத்தடுத்த திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த தொடர் பாரதிகண்ணம்மா. இத்தொடரில், நாயகன் - நாயகி இடையே நடக்கும் சண்டையில் பிரிக்கப்பட்ட இரட்டை குழந்தைகள் மீண்டும் தங்களின் பெற்றோருடன் இணையவிருப்பது குறித்த கதையம்சம் இடம்பெற்று இருக்கும்.
குழந்தைகள் தங்களின் பெற்றோரை அறிவார்களா? மாட்டார்களா? என்ற ஏக்கம் தொடங்கி அது பொய்த்துப்போனது. ஆனால், சகோதரிகள் இருவருக்கும் தங்களின் பெற்றோர் குறித்த விபரம் மட்டும் தெரிந்தாலும், அதனை நாயகன் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த நிலையில், பாரதி கண்ணமாவின் இந்த வார ப்ரமோ காட்சியில், "கண்ணம்மாவின் பெயரை கூறி வேலைக்கு வரும் சிலர், மருத்துவமனையை கடத்த திட்டமிட்டுள்ளது தெரியவருகிறது" என்பதை சுட்டிக்காட்டும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அத்துடன் டாக்டர் பாரதி, "உடனடியாக நான் சென்று அங்குள்ள அனைவரையும் மீட்பேன்" என களம் இறங்கியதை தொடர்ந்து, உள்ளே டாக்டர் எனும் பெயரில் பாரதியுடன் மற்றொருவரும் செல்கிறார். அப்பொழுது உள்ளே சென்றவர்களை தீவிரவாதிகள் பரிசோதனை செய்த பின், கண்ணம்மாவை அழைத்து இவர் யார்? என்று கேட்கவே, இவர் எங்களது டாக்டர் என கண்ணம்மா கூறுகிறார்.
மற்றொருவரை கேட்கும் போது அவர் குறித்த தகவல்கள் கூறப்படாததால், கோபமுற்ற தீவிரவாதிகள் இருவரையும் அழைத்து சென்று சுடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இதன் மூலம் ரசிகர்கள் பாரதி இறந்துவிட்டாரா?.. அப்போ சீரியல் அவ்வளவுதானா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.