த்ரிஷா புடவையில் விஜயின் கட்சி கொடி.. பிரபல தயாரிப்பாளர் சரமாரி கேள்வி?
Bakiyalakshmi Promo: மறைந்த ராமமூர்த்தியின் இறுதிப்பயணம்; கொள்ளி வைக்க முடியாத பாவியான கோபி; மகளான பாக்கியா..!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர்களில், தமிழக மக்களின் ஆதரவை பெற்றதாக பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) இருந்து வருகிறது. கடந்த 2020 ம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடரின் முக்கிய கதாபாத்திரத்தில் ரேஷிமா பசுபுலேட்டி, கே.எஸ் சுசித்ரா, நேஹா மேனன், திவ்யா கணேஷ், சதிஷ் குமார், நந்திதா ஜெனிபர் உட்பட பலரும் நடித்து வருகின்றனர். தமிழக மக்களால் பெரிதும் ரசிக்கப்படும் நெடுந்தொடர்களின் பட்டியலில் பாக்யலட்சுமியும் இருக்கிறது.
இந்நிலையில், திடீரென ராமமூர்த்தி காலமானார். இதனால் பாக்கியாவின் குடும்பத்தினர் உடைந்துபோயினர். பாக்யலட்சுமியின் மாமியார் ஈஸ்வரி, தனது கணவர் ராமமூர்த்திக்கு மகனான கோபி இறுதிச்சடங்கு உட்பட எந்த விஷயத்திலும் கலந்துகொள்ளக்கூடாது என ஆணையிடுகிறார். மேலும், மருமகளான பாக்கியவை, மகளாக ஏற்று இறுதிச்சடங்கை அவரே மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறுகிறார்.
இதையும் படிங்க: Siragadikka Aasai: விஜயாவுக்கு அடுத்த ஆப்பு ரெடி; செக் வைத்த முத்து & ரவி.! அசத்தல் ப்ரோமா.!!
இதனால் பாக்கியா கனத்த இதயத்துடன் தனது மாமனார் ராமமூர்த்திக்கு கொள்ளி வைத்து இறுதிச்சடங்கை நிறைவு செய்கிறார். உடன் அவரின் மகன்களும் இருக்கின்றனர். இந்த வீடியோ பலரையும் கலங்க வைக்கும் வகையில் இருக்கிறது.
இதையும் படிங்க: பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து கமல் வெளியிட்ட அறிவிப்பு? சோகத்தில் ரசிகர்கள்!