அந்த டாப் நடிகையின் '50 வினாடி'க்கான சம்பளத்தை பார்த்து, மிரளும் திரையுலகம்.!
பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து கமல் வெளியிட்ட அறிவிப்பு? சோகத்தில் ரசிகர்கள்!
பிக்பாஸ் சீசன் 8
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 7 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், விரைவில் 8வது சீசன் தொடங்கப்பட உள்ளது. இதில், இதுவரை ஒளிபரப்பான 7 சீசன்களையும் உலகநாயகன் கமலஹாசன் தான் தொகுத்து வந்தார். 8வது சீசனையும் கமலஹாசன் தான் தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகி உள்ளதாக அறிவித்துள்ளார்.
பிக்பாஸில் இருந்து கமல் விலகல்
இதுகுறித்து உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அன்பான பார்வையாளர்களே, 7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய பிக் பாஸ் பயணத்திலிருந்து ஒரு சிறிய ஓய்வு எடுத்துக் கொள்கிறேன். ஏற்கனவே நான் ஒப்புக்கொண்ட சினிமா பணிகள் காரணமாக பிக் பாஸ் அடுத்த சீசனை தொகுத்து வழங்க முடியவில்லை என்பது எனக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: அச்சச்சோ... அட்டிட்யூட் காட்டும் கமல் பட நாயகி.? இப்படியே போனா சீரியல் தான்.!! கலாய்க்கும் நெட்டிசன்கள்.!!
எனவே, அடுத்து வரும் பிக் பாஸ் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியின் மூலமாக என் மீது அன்பையும், பாசத்தையும் பொழிந்த ரசிகர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பு அளித்த விஜய் டிவி மற்றும் பிக் பாஸ் குழுவினர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பிக்பாஸ் சீசன் 8 சிறப்பாக அமைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஏமாற்றி திருமணம் செய்த விஜய் டிவி பிரபலம்.. பரபரப்பை ஏற்படுத்திய பிரபலத்தின் மனைவி!