சினிமா

பாகுபலியில் சம்பாதித்த அணைத்து பணத்தையும் பிரபாஸ் என்ன செய்துள்ளார் தெரியுமா?

Summary:

Bagubali prabhas spend all money to new multiplex theater

பாகுபலி என்ற பிரமாண்ட திரைப்படம் மூலம் இந்திய அளவில் அணைத்து ரசிகர்களின் மனதையும் கவர்ந்தவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி ஓன்று மற்றும் இரண்டு என அதன்  2 பாகங்களுக்காவும் அவர் 5 ஆண்டுகளை ஒதுக்கினார் நடிகர் பிரபாஸ்.

அதே நேரத்தில் வேறு எந்த படத்திலும் அவர் கவனம் செலுத்தவில்லை. அதனாலோ என்னவோ அவருக்கு படத்திற்கு பிறகு பெரும் புகழ் கிடைத்தது. மேலும் அவருக்கு புகழ்பெற்ற மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை வைத்தார்கள். 

மேலும் பாகுபலி படத்திற்கு நடிகர் பிரபாஸ் அதிக சம்பளம் வாங்கியதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன. அதாவது 27 கோடி என அந்நேரத்தில் சொல்லப்பட்டது. பாகுபலி திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை அனுஷ்கா நடித்திருந்தார். இந்நிலையில் இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் தகவல்கள் தெரிவித்தன.

தற்போது நடிகர் பிரபாஸ் சாஹோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் பணத்தை மல்டிபிளக்ஸ் சினிமா திரையரங்கில் முதலீடு செய்துள்ளார்.
ஆந்திராவின் நெல்லூரில் உள்ள மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தியேட்டர் தானாம் அது. உலகின் மூன்றாவது மிகப்பெரிய தியேட்டர் என்ற சிறப்பை பெற்றுள்ளது.

மேலும் தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவும் இதுபோல தியேட்டர்களில் பணத்தை முதலீடு செய்துள்ளாராம்.


Advertisement