"பேச்சிலர் பட நாயகியின் கண்களை கவரும் போட்டோஷூட்!"

"பேச்சிலர் பட நாயகியின் கண்களை கவரும் போட்டோஷூட்!"


Bachelor movie actress glamour photos

2021ம் ஆண்டு வெளியான "பேச்சிலர்" திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் திவ்யபாரதி. இவர் பிரபல மாடல் அழகியும் ஆவார். இவர் தற்போது அஞ்சனா அலிகான் இயக்கத்தில் பிக் பாஸ் புகழ் முகேன் ராவுக்கு ஜோடியாக மதில் மேல் காதல் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

Bachelor

மேலும் இப்படத்தை தயாரிப்பாளர் சிவசங்கர் தயாரிக்க, இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். இதையடுத்து ஷிவ் மோஹா இயக்கத்தில் ஈகல் ஐ ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் "ஆசை" படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த இரண்டு படங்களுமே வரும் 2024ம் வருடம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் திவ்யபாரதியின் சமூக வலைதளப்பக்கத்தில் ஏராளமான கவர்ச்சிப் புகைப்படங்களை திவ்யபாரதி தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்களும் உள்ளனர்.

Bachelor

இந்நிலையில் தற்போது அவர் கருப்பு நிற உடையில் ஸ்டைலிஷ் லுக்கில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளதோடு அல்லாமல், இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகின்றன.