மாஸ் தான்... இனி இவர்களும் அய்யானர் துணை சீரியலில் நடிக்குறாங்கலாம்...! எதிர்பார்பில் ரசிகர்கள்....

விஜய் தொலைக்காட்சி எப்போதும் தனித்துவமான கதைகளுடன் தங்களை ஈர்க்கும் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வரிசையில், கடந்த ஜனவரி மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் ‘அய்யனார் துணை’ சீரியல் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
கதையின் சுருக்கம்
நிலா என்பவர், பெற்றோர்களின் வற்புறுத்தலால் தனக்குப் பிடிக்காத திருமணத்தில் தள்ளப்படுகிறார். அந்த திருமணத்திலிருந்து தப்பிக்க, ஒரு பொய் கல்யாணம் செய்ய முடிவெடுக்கிறார். இந்த புதிய வாழ்க்கையில் பல திருப்பங்கள், சுவாரசியங்கள் நிலாவை எதிர்கொள்கின்றன.
தற்போதைய கதையில் நிலா தனியாக வீடு தேடி புறப்பட்டிருக்கும் போது, சோழன் தனது தில்லாலங்கடி பாணியில் கதைக்குள் நுழைந்து நிலாவை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வருகிறார். இந்த காட்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: அடி தூள்.... பாக்கியா வைத்த செக்கில் வாயடைத்துபோன சுதாகர்! எதிர்பாராத சுவாரஷ்யம் இதோ...
புதிய கதாபாத்திரங்கள் – நியூ என்ட்ரி
இப்போது இந்த சீரியலில் சில புதிய நடிகர்கள் களமிறங்கியுள்ளனர்:
பாரதி மோகன் – கார்த்திகாவின் அப்பாவாக நடித்து வருகிறார்.
திவ்யா விஜயகுமார் – பல்லவன் ஜோடியாக புதிய கதாபாத்திரத்தில் நுழைந்துள்ளார்.
இவர்கள் வருகையால் சீரியலின் கதை இன்னும் தீவிரம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நீச்சல் உடையில் ஒரே மஜா.! கணவருடன் ஹாயாக ஹனிமூன் சென்றுள்ள நடிகை பார்வதி நாயர்.!எங்கு தெரியுமா??