திடீரென்று குடும்பத்துடன் மும்பைக்கு சென்ற அட்லீ..என்ன காரணம் தெரியுமா.?

திடீரென்று குடும்பத்துடன் மும்பைக்கு சென்ற அட்லீ..என்ன காரணம் தெரியுமா.?


atlee-and-his-wife-went-mumbai

"ராஜா ராணி" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என விஜயை வைத்து மூன்று ஹிட் படங்களை கொடுத்து ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே திரும்பி பார்க்க வைத்துள்ளார். இதையடுத்து அட்லீ பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார்.

atlee

கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கிய "ஜவான்" திரைப்படம் உலகெங்கிலும் ஐந்து மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது. எனவே இவர் தொடர்ந்து பாலிவுட்டிலும் படங்களை இயக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஜவான் படப்பிடிப்பின் போது அட்லீ மும்பையில் வீடு வாங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்தியா நந்தா ஹீரோவாக நடித்துள்ள "தி ஆர்ச்சீஸ்" திரைப்படம் இந்த வாரம் நெட்பிளிக்சில் வெளியாகிறது. படத்தை ஜோயா அக்தர் இயக்கியுள்ளார்.

atlee

மேலும் இப்படத்தில் ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர், ஷாருக்கானின் மகள் சுஹானா கான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பிரீமியர் ஷோ மும்பையில் திரையிடப்பட்டது. அதைப் பார்க்கவே அட்லீயம், அவர் மனைவி ப்ரியாவும் மும்பை சென்றுள்ளனர். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.