பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
ஐயோ.. இது உண்மையில்லை! யாரும் நம்பாதீங்க! பதறியடித்து விளக்கமளித்த அஸ்வின்! ஏன்? என்னாச்சு தெரியுமா??
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் அஸ்வின் மற்றும் சிவாங்கி. இவர்கள் இருவரும் கூட்டணியில் இணைந்தால் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு இருக்கும். இந்த நிலைகள் ரசிகர்கள் பலரும் சிவாங்கி மற்றும் அஸ்வினை நினைத்து ஏராளமான வீடியோக்கள் மீம்ஸ்கள் போன்றவற்றை உருவாக்கி வந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் இருவரையும் சேர்த்து மார்ஃபிங் செய்யப்பட்ட சில புகைப்படங்கள், தவறான தகவல்களுடன் கூடிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதனைக் கண்ட அஸ்வின் இதுகுறித்து விளக்கமளித்து சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், Morph செய்யப்பட்ட வீடியோக்களை, புகைப்படங்களை பார்த்தேன். அது முழுவதும் தவறான தகவல். எனது புகழை சீர்குலைக்கும் வகையில் இருந்தது. இப்போது வரை நான் சிங்கிளாக இருக்கிறேன். எனக்கும் அந்த கோ-ஸ்டாருக்கும் எந்த ரிலேஷன்ஷிப்பும் இல்லை.
எனது ரசிகர்கள் என்னுடைய தூணாக இருந்து கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து எனக்கு ஆதரவளிங்கள். ஒரு நபரை பற்றிய தனிப்பட்ட விபரங்களை தவறாக பரப்புவது அவரை காயப்படுத்தும். அதனை தவிருங்கள். நான் இப்போதுதான் எனது கேரியலில் முதல் கட்டத்தில் இருக்கிறேன். அதில் மட்டும்தான் என் கவனம் உள்ளது என கூறியுள்ளார். மேலும் ஷிவாங்கியும் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகிறது. அதில் உண்மை இல்லை. இதுபோன்ற புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிராதீர்கள் என வேண்டி கேட்டுகொண்டுள்ளார்.