தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
"ஒரே கல்லுல இரண்டு மாங்காய்" பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் மகன் ஆர்யனின் பலே ப்ளான்.!
பாலிவுட் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ஷாருக்கான் இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியுடன் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஜனவரி மாதம் இவரது நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இவரது மூத்த மகன் ஆரியன் கான். லண்டனில் படித்த இவர் கடந்த ஆண்டு போதை மருந்து வழக்கில் சிக்கி சர்ச்சைக்கு உள்ளானது பாலிவுட் வட்டாரங்களிலும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவர் காவல்துறையினரால் விடுவிக்கப்பட்டார்.
பாலிவுட்டில் வாரிசு நடிகர்களின் படங்களை இயக்கி வருபவர் கரன் ஜோஹர். இவர் ஷாருக்கானின் மகனை கதாநாயகனாக வைத்து படம் இயக்குவதற்கு விருப்பம் தெரிவித்தார். ஆனால் ஆரியன் கான் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். அவருக்கு இயக்குனராக வேண்டும் என்பதுதான் ஆசை.
தற்போது தனது தந்தையை வைத்து விளம்பர படம் ஒன்றை இயக்க இருக்கிறார் ஆரியன் கான். அந்த விளம்பரத்திற்கான நிறுவனத்தில் அவரும் ஒரு துணை இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் தனது நிறுவனத்தின் ப்ராடக்ட் பிரபலமான ஸ்டார் தனது தந்தையின் மூலம் மார்க்கெட்டிங் செய்வதுடன் எல்லா நிறுவனங்களும் விரும்பும் மார்க்கெட்டில் உள்ள நடிகரை இயக்கும் வாய்ப்பையும் பெற்றிருக்கிறார். இதன் காரணமாக ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்திருக்கிறார் ஆரியன் கான்.