சினிமா

அருண் விஜய் பதிவிட்ட ஒற்றை பொம்மை படத்தால் கொதித்தெழும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்! அப்படி என்னதான் நடக்குது?

Summary:

arun vijay tweet goes controversy viral

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த மாதம் 17 ஆம் தேதி வெளியானது மிஸ்டர் லோக்கல். நயன்தாரா, ராதிகா, யோகி பாபு, சதிஷ் என பல பிரபலமங்களை கொண்டு எடுக்கப்பட்டாலும் இயக்குனர் ராஜேஷின் இயக்கம் பெரிய அளவில் இல்லை. 

சீமராஜாவை தொடர்ந்து மிஸ்டர் லோக்கல் படமும் சிவகார்த்திகேயனுக்கு சரிவையே ஏற்படுத்தும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது தடம் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற நடிகர் அருண் விஜய் ட்விட்டரில் வாயை மூடியவாறு பதிவிட்டுள்ள பதிவு சிவகார்த்திகேயன் ரசிகர்களை வெறுப்படைய செய்துள்ளது.

mr local க்கான பட முடிவு
நிச்சயம் அருண் விஜய், சிவகார்த்திகேயனின் தொடர் தோல்விகளை கலாய்க்கும் விதமாக தான் இப்படி பதிவிட்டுள்ளார் என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொந்தளிக்க துவங்கிவிட்டனர். அருண் விஜய் பதிவிட்ட அந்த ஒற்றை பொம்மை படத்தை வைத்துக்கொண்டு சிவகார்த்திகேயன் மற்றும் அருண் விஜய் ரசிகர்கள் தங்களுக்குள் மாறி மாறி கருத்துக்களை பதிவிட்டு மோதி வருகின்றனர்.


அருண் விஜய் மீது சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இப்படி கொந்தளிக்க காரணம், சீமராஜா படத்தின் ட்ரைலர் வெளியான சமயத்தில், "யாரெல்லாம் மாஸ் காட்டுவது என விவஸ்தை இல்லாமல் போச்சு எனவும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எல்லாம் தெரியும்" என்றும் பதிவிட்டிருந்தார். பின்னர் இது சர்ச்சையாக மாறவே தனது ட்விட்டரை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என தெரிவித்தார்.இதனை மனதில் வைத்துக்கொண்டே சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அருண் விஜய் மீது மீண்டும் கோவத்தை காட்டியுள்ளனர். ஆனால் மீண்டும் அடுத்து ஒரு பதிவில் அருண் விஜய் அதற்கு விளக்கம் தெரிவித்துள்ளார். அதில், " தன்னுடைய அடுத்த படம் உறுதியாகியுள்ளது. அதன் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். அதனை குறிப்பிடவே முந்தைய பதிவை பதிவிட்டேன் என்றும், யாரும் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம் என்றும் என்னுடைய வேலையை மட்டும் தான் நன் பார்க்கிறேன்" என்றும் பதிவிட்டுள்ளார்.


Advertisement