அருண் விஜய்யின் நடிப்பில் க்ரைம் த்ரில்லர் படம் "தடம்"; மரண மாஸ் ட்ரைலர்!

அருண் விஜய்யின் நடிப்பில் க்ரைம் த்ரில்லர் படம் "தடம்"; மரண மாஸ் ட்ரைலர்!


Arun vijay thadam movie trailer

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அருண் விஜய். தமிழ் சினிமாவில் பல வருடங்களுக்கு முன்பே அறிமுகமாகியிருந்தாலும் சொல்லும் அளவிற்கு இவரது படங்கள் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. இந்நிலையில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்தார் அருண் விஜய்.

என்னை அறிந்தால் திரைப்படம் அருண் விஜய்யின் சினிமா பயணத்தில் முக்கியமான படம் என்றே சொல்லலாம். அதன்பின்னர் வரிசையாக படங்களில் நடித்து வருகிறார் அருண் விஜய். இந்நிலையில் செக்கச்சிவந்த வானம்’ படத்துக்கு பிறகு அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள க்ரைம் த்ரில்லர் படம் ‘தடம்’. 

arun vijay

இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இதில் முக்கிய கதாபாத்திரங்களில் தான்யா, ஸ்ம்ருதி, வித்யா பிரதீப், சோனியா அகர்வால், யோகி பாபு நடித்துள்ளனர். ‘ரேதன் – தி சினிமா பீப்பிள்’ நிறுவனம் தயாரித்துள்ள இதற்கு அருண்ராஜ் இசையமைத்துள்ளார். படத்தை வருகிற மார்ச் 1-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

தற்போது, இந்த படத்தின் ட்ரெய்லரை பிரபல நடிகர் ‘ஜெயம்’ ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.