சினிமா

வாவ்..செம கியூட்! ஹீரோயின் ஆகிருவாரா? நடிகர் அருண் விஜய்யின் அருகில் இருக்கும் இந்த பொண்ணு யார் தெரியுமா? அசந்துபோன ரசிகர்கள்!

Summary:

நடிகர் அருண் விஜய்யின் அக்கா மகளது புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்தாலும் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருந்த திறமையான நடிகர்களுள் ஒருவர் அருண் விஜய். இவர் பல திரைப்படங்களில் நடித்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. 

 இந்த நிலையில் அவர் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்தது ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து அவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட்டானது. அருண் விஜய் முன்னணி நடிகர் விஜயகுமாரின் முதல் மனைவியின் மகனாவார். மேலும் அவருக்கு அனிதா, கவிதா என இரு சொந்த சகோதரிகள் உள்ளனர்.

 

இவர்களில் கவிதா சரத்குமார் நடித்த கூலி திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் திரைத்துறையில் சம்பந்தமில்லாத அனிதா 1997 ஆம் ஆண்டு கோகுல் கிருஷ்ணன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டு தற்போது லண்டனில் வசித்து வருகிறார். இவர்களது மகள் தியா. அவர் தனது தாய் மாமாவான அருண் விஜய்யின் திருமண நாளை முன்னிட்டு அவருடன் குடும்பத்தோடு எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் வாவ் செம க்யூட்டாக இருக்கிறீர்களே! நீங்களும் நடிக்க வருகிறீர்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Advertisement