சினிமா

அருண் விஜய்யின் அடுத்த படத்திற்கு இப்படியொரு தலைப்பா! பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வித்தியாசமா வேற லெவலில் இருக்கே!!

Summary:

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்தாலும் சொல்லிக்கொள்ளும்படி முன்னணியில் வராமல

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்தாலும் சொல்லிக்கொள்ளும்படி முன்னணியில் வராமல் இருந்த  திறமையான நடிகர்களுள் ஒருவர் அருண் விஜய். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவர் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார். அதனை தொடர்ந்து அவருக்கு ஏராளமான படவாய்ப்புகள் வரத்துவங்கியது. மேலும் அவர் நடித்த படங்கள் அனைத்துமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று செம ஹிட்டானது.

இந்நிலையில் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் அருண் விஜய் தற்போது அறிவழகன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடித்து வருகின்றார். ஹரி இயக்குனர் அறிவழகன் ஆறாது சினம், ஈரம், வல்லினம், குற்றம் 23 உள்ளிட்ட படங்களை  இயக்கியவர். 
இந்த படத்தில் ரெஜினா, ஸ்டெபி படேல்  ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிக்கும்  இப்படத்திற்கு சம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

 இந்நிலையில் தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு பார்டர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஒரு புறம் அருண்விஜய் முகமும் இந்திய மேப்பும் கலந்தவாறு வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.

 


Advertisement