அப்படியே மெய்மறந்து போவீங்க.. அப்பாவின் பாடலுக்கு அழகாக நடனம் ஆடிய ஐஸ்வர்யா.. குவியும் லைக்குகள்

அப்படியே மெய்மறந்து போவீங்க.. அப்பாவின் பாடலுக்கு அழகாக நடனம் ஆடிய ஐஸ்வர்யா.. குவியும் லைக்குகள்


Arjun daughter latest dance video

தனது தந்தையின் படத்தில் வரும் பாடலுக்கு மிகவும் அழகாக நடனமாடி லைக்ஸை அள்ளிவருகிறார் நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன்.

தமிழ் சினிமாவில் பல வருடங்களால பிரபலமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் அர்ஜுன். இன்றுவரை அர்ஜுன் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருப்பதற்கு அவர் தேர்ந்தெடுத்து நடித்த பல்வேறு கதைங்கள் காரணம். குறிப்பாக ஜென்டில்மேன், முதல்வன், ஜெய்ஹிந் போன்ற படங்கள் இன்றுவரை மக்களால் மறக்கமுடியாத படங்களின் பட்டியலில் உள்ளது.

தற்போது வில்லன், ஹீரோ என பலவிதமான கேரக்டரில் நடிக்க தொடங்கிவிட்டார் அர்ஜுன். இதனிடையே அருஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுனும் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வலம்வர தொடங்கிவிட்டார். இவர் விஷாலுக்கு ஜோடியாக பட்டத்துயானை திரைப்படம் மூலம் நாயகியாக அவதாரம் எடுத்தார்.

Arjun

அதன்பின்னர் பெரிதாக படவாய்ப்புகள் அமையாவிட்டாலும் பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில் தனது தந்தை அர்ஜுன் நடிப்பில் வெளியான ரிதம் படத்திலிருந்து தனக்கு பிடித்த பாடலான ”காற்றே என் வாசல் வந்து..” என்ற பாடலுக்கு நடனமாடி வீடியோ பதிவு செய்து அந்த வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தற்போது அந்த வீடியோ பதிவு அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி லைக்ஸை அள்ளிவருகிறது. இதோ அந்த வீடியோ.