பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்! அவரது சினிமா வெற்றி பயணத்தின் ஒரு பார்வை!
இனி கலகலப்புக்கு பஞ்சமிருக்காது! பிக்பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த பிரபலம்! செம ஹேப்பியில் போட்டியாளர்கள்!வைரலாகும் வீடியோ.!

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடந்து வருகிறது. மேலும் இந்த போட்டியில் மக்களுக்கு நன்கு பரிச்சயமான பல பிரபலங்களும், சில புதுமுகங்களும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் நாளுக்கு நாள் வாக்குவாதங்கள், மோதல்கள், உற்சாகங்கள் என எதற்கும் குறைவில்லாமல் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் சென்று கொண்டுள்ளது. இந்த நிலையில் இன்றைய முதல் ப்ரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.
அதில் பிக்பாஸ் வீட்டிற்குள் பிரபலம் ஒருவர் புதிதாக களமிறங்கியுள்ளார். அதாவது தொகுப்பாளினியான அர்ச்சனா இன்று புதிய போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைகிறார். அவரைக் கண்டதும் போட்டியாளர்கள் அனைவரும் உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர். இதனால் பிக்பாஸ் வீடு மேலும் கலகலப்பாகும் என ரசிகர்களால் பெருமளவில் எதிர்பார்க்கப்படுகிறது.