அட, அவரா இது! அச்சு அசல் அப்படியே எம்ஜிஆரை பார்த்தமாதிரியே இருக்கே! ரசிகர்களை பிரமிக்கவைத்த புகைப்படங்கள்!

அட, அவரா இது! அச்சு அசல் அப்படியே எம்ஜிஆரை பார்த்தமாதிரியே இருக்கே! ரசிகர்களை பிரமிக்கவைத்த புகைப்படங்கள்!


aravindsamy-in-mgr-role-pictures-viral

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்தவர் அரவிந்த்சாமி. இவர் தனிஒருவன் படத்தின் மூலம் மாஸ் ரீஎண்ட்ரி கொடுத்து, தொடர்ந்து ஹிட்டான பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் தற்போது ஏ.எல் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவியில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார்.

கொரோனா பரவலால் இப்படத்தின்  படப்பிடிப்புகள் சில காலங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் மீண்டும் ஷூட்டிங் தொடங்கப்பட்டு  முடிந்துள்ளது. இந்நிலையில் எம்ஜிஆரின் நினைவு நாளான இன்று நடிகர் அரவிந்த்சாமி தான் எம்.ஜி.ஆர். தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் அதில் புரட்சித்தலைவர் எம்ஜிஆராக நடிப்பது கௌரவம் மட்டுமல்ல பெரிய பொறுப்பும் கூட. என் மீது நம்பிக்கை வைத்த இயக்குனர் ஏ.எல். விஜய் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. தலைவரின் நினைவாக இந்த புகைப்படங்களை இன்று வெளியிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் அச்சு அசல் எம்ஜிஆரை போலவே இருக்கிறீர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.