சினிமா

அறந்தாங்கி நிஷாவின் மகள் எப்படி வளர்ந்துட்டார் பாருங்க.!! அதுவும் அம்மாவுக்கு செய்யும் உதவியை பாருங்கள்.. வைரல் வீடியோ

Summary:

காமெடி நடிகை நிஷா மகளின் சமத்தா அம்மாவிற்கு உதவும் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.

காமெடி நடிகை நிஷாவின் மகள் அம்மாவிற்கு உதவும் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை சேர்ந்த நிஷா. கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சி இவரை புகழின் உச்சத்திற்கே அழைத்துச்சென்றது.

மேடையில் இவர் செய்யும் காமெடி, வசனங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இதனை தொடர்ந்து இவர் தற்போது சினிமா படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 4 இல் கலந்துகொண்ட நிஷா பெரிதாக வரவேற்பை பெறாவிட்டாலும் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

சினிமா, சின்னத்திரை என பிசியாக இருந்துவரும் இவருக்கு ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் அவரது பெண் குழந்தையிடம், தண்ணி வேணும்மா என நிஷா கேட்டதும், அவரது குழந்தை தண்ணி எடுத்து கொடுக்கும் வீடியோ ஒன்றை  அவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டு, அழகு சஃபா இது போதும் எனக்கு இது போதுமே என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ....
Advertisement