இதுதான் முதல்முறை! தளபதி 63 குறித்து ஏ.ஆர் ரஹ்மான் என்ன கூறியுள்ளார் தெரியுமா?

இதுதான் முதல்முறை! தளபதி 63 குறித்து ஏ.ஆர் ரஹ்மான் என்ன கூறியுள்ளார் தெரியுமா?


ar-rahman-talk-about-thalapathi-63

தெறி மற்றும் மெர்சல் படத்தை தொடர்ந்து அட்லீ மற்றும் விஜய்  கூட்டணியில் மூன்றாவதாக வருவாகும் படம் தளபதி 63. இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும் விளையாட்டை மையமாக கொண்ட இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்த கதிர் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Thalapathi 63

மேலும் மதயானை கூட்டம். பரியேறும் பெருமாள் படங்களில் கதாநாயகனாக நடித்த கதிர் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.மேலும் இப்படத்திற்காக ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் தளபதி 63 குறித்து ஏ.ஆர். ரஹ்மான் புகழ்ந்து பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது, நான் இந்த மாதிரியான ஒரு கதைக்கு ஹாலிவுட்டில்தான்  இசையமைத்திருக்கிறேன். தென்னிந்திய சினிமாவில் இது தான் முதல்முறை. இயக்குநர் அட்லீ பீலே, லெகான் உள்ளிட்ட படங்களின் ரசிகர். அவரது இசை உணர்வு மிகவும் சிறப்பானது

Thalapathi 63

 

 அவர் நான் இசையமைத்த அனைத்து ஆல்பத்தையும் கேட்டிருக்கிறார். அதில் இருந்து இந்த மாதிரி பண்ணுங்களேன் சார், என்று கேட்பார். இது போல் கேட்கும் இயக்குநர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.

இவ்வாறு இசையுடன் ஒன்றிணைந்து, ரசித்து செய்யும் போது திரையில் அது சிறப்பாக வந்திருப்பதை உணர முடியும். ஏதோ பாட்டு வாங்கிவிட்டோம் என்று அடுத்த கட்டத்திற்கு செல்லாமல், ஒவ்வொன்றையும் அட்லீ ரசித்து செய்வார்  என்று கூறியுள்ளார்.