உலகமே கொண்டாடியிருக்கும்! ஆனா. 'இரவின் நிழல்' குறித்து இசைப்புயல் கூறியுள்ளதை பார்த்தீர்களா!!

உலகமே கொண்டாடியிருக்கும்! ஆனா. 'இரவின் நிழல்' குறித்து இசைப்புயல் கூறியுள்ளதை பார்த்தீர்களா!!


ar-rahman-speech-abour-iravin-nilal-movie

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை உருவாக்கி ரசிகர்களை அசர வைக்கக்கூடியவர் பார்த்திபன். அவரது தற்போது உருவாகியுள்ள திரைப்படம் இரவின் நிழல். இப்படத்தில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், பிரிகடா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படம் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். 

இரவின் நிழல் படத்திற்காக ஏ.ஆர் ரகுமான் உட்பட மூன்று ஆஸ்கர் வெற்றியாளர்கள் இரவின் நிழல் படத்திற்காக பணியாற்றியுள்ளனர். இந்நிலையில் இதன் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில், பார்த்திபன், ஏ.ஆர் ரகுமான், இயக்குநர் சமுத்திரகனி, ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, பாடலாசிரியர் மதன் கார்க்கி, இயக்குநர் கரு.பழனியப்பன்  மற்றும் பாடகி ஷோபனா சந்திரசேகர், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Iravin nizhal

அப்போது பேசிய ஏ.ஆர் ரகுமான் கூறுகையில், பார்த்திபனுடன் படம் பண்ண வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. தமிழ்நாட்டிலிருந்து ஒருவர் இதுபோன்ற படங்களை உருவாக்குவது மிகவும் கடினம். நம்ம ஊரிலேயே பலருக்கும் அதீத திறமைகள் உள்ளது. நாம் நினைத்தால் என்ன வேணாலும் செய்யலாம். இந்த படத்தை அமெரிக்கா, ஐரோப்பாவில் வெளியாகி இருந்தால் உலகமே கொண்டாடி இருக்கும். தமிழ்நாட்டில் எடுத்துள்ளோம் பார்ப்போம் என கூறியுள்ளார்