மேடையில் பேசிய மனைவியியை இடைமறித்து ஏ.ஆர். ரஹ்மான் சொன்ன விஷயம்... கரகோஷத்தில் ரசிகர்கள்.!

மேடையில் பேசிய மனைவியியை இடைமறித்து ஏ.ஆர். ரஹ்மான் சொன்ன விஷயம்... கரகோஷத்தில் ரசிகர்கள்.!


ar-rahman-request-his-wife-to-speak-in-tamil-on-stage

இந்தியாவின் புகழை உலகெங்கும் ஓங்கச் செய்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்ற ஆஸ்கார் நாயகனான இவர் பல தேசிய விருதுகளையும் கைப்பற்றியுள்ளார். சமீபத்தில் இவரது இசையமைப்பில் வெளியான பத்து தல திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வருகின்ற 28ஆம் தேதி இவரது இசையமைப்பில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் தனது மனைவியுடன் கலந்து கொண்டார் ஏ.ஆர். ரஹ்மான். தொகுப்பாளருடன் ஏ.ஆர். ரகுமான் பேசிக் கொண்டிருந்தபோது  நிகழ்ச்சியின் அழைப்பாளர்கள் அவரது மனைவியை மேடைக்கு வருமாறு அழைத்தனர்.

music director

இதனைத் தொடர்ந்து மேடைக்கு வந்த ஏ. ஆர். ரஹ்மானின் மனைவி ஹிந்தியில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இடைமறித்த ஏ.ஆர். ரகுமான் செல்லமாக தனது மனைவியிடம் தமிழில் பேசலாமே என கூறினார் இதைக் கேட்ட ரசிகர்கள் பலத்த கரகோஷம் எழுப்பி அரங்கை அதிர செய்தனர்.

ஏ.ஆர். ரகுமான்  எங்கு சென்றாலும் தமிழில் பேசுவது தான் வழக்கம். ஆஸ்கார் விருது வாங்கிய மேடையில் கூட  'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று  கூறியவர். ஒருமுறை தமிழ் தொகுப்பாளர் ஒருவர் ஹிந்தியில் பேசிக் கொண்டிருந்தபோது தமிழில் பேசலாமே என  அவர் கூறியதும் குறிப்பிடத்தக்கது.