அட.. வேற லெவல்.! நடிகர் தனுஷின் 50வது படத்திற்கு இசையமைக்கப் போவது இந்த பிரபலமா?? வெளிவந்த சூப்பர் தகவல்!!AR rahman going to be a music director in thanush 50 movie

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். அவர் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழி படங்களிலும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முக திறமை கொண்டு விளங்கும் இவரது நடிப்பில் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் வாத்தி.

இப்படம் வெளியான மூன்று நாட்களிலேயே ரூபாய் 51 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது. வாத்தி படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்கி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

thanush

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் கேங்ஸ்டர் கதையம்சம் கொண்டு 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தனுஷின் 50 வது படத்திற்கு இசையமைக்கப் போவது யார்? என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில், டி50 படத்திற்கு ஆஸ்கர் நாயகன், இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு அவர் தனுஷின் மரியான், ராஞ்சனா, அட்ரங்கி ரே போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.