இந்தியா சினிமா

என்ன ஒரு மனிதாபிமானம் ஏ.ஆர்.ரகுமானுக்கு!! கேரளாவுக்கு அவர் அளித்த நிவாரணம் எவ்வளவு தெரியுமா?

Summary:

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து நிவாரண உதவிகள் குவிந்த வண்ணம் உள்ளன. திரையுலக நட்சத்திரங்கள் போட்டிபோட்டுக்கொண்டு நிவாரணம் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் நீண்ட நாட்களாக இதைப்பற்றி பேசாமல் இருந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 1 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.

ar rahman donates kerala க்கான பட முடிவு

இந்நிலையில் தான் , அமெரிக்காவின் ஓர்லான்டோ உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று இசை விழாக்களை நடத்தி வரும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், அதன்மூலம் கிடைத்த 1,00,00,000 பணத்தை கேரள வெள்ள நிவாரணத்திற்கு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரஹ்மான், “அமெரிக்காவில் இசை கச்சேரி நடத்திவரும் என் சக கலைஞர்களும் நானும் சேர்ந்து கேரள மக்களுக்கு செய்யும் சிறு உதவி. இதன்மூலம் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.மேலும் இத்துடன், கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு அனுப்பும் 1 கோடி ரூபாய்க்கான காசோலையின் புகைப்படத்தையும் இணைத்துள்ளார். 


Advertisement