இளையராஜாவின் மாணவராக ஏ.ஆர்.ரகுமான்!! இசைப்புயல் வெளியிட்ட புகைப்படம்!!

AR Rahman as a ilayaraja student


AR Rahman as a ilayaraja student


கோடான கோடி இசை ரசிகர்கள் மட்டுமல்லாது, தனது அற்புதமான இசை ஆற்றலால் இசைக் கலைஞர்களையும் வியக்க வைத்தவர் இளையராஜா. தமிழ் சினிமாவின் இசை பகுதியை கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேலாக தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தவர் இளையராஜா.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில், இசைஞானி இளையராஜாவின் 75 பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பாராட்டு விழாவும், பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் அவை நேற்றும், இன்றும் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
கடந்த 2 நாட்களாக நடந்துவரும் இந்த நிகழ்ச்சியில் இளையராஜாவுடன் இசைபுயல் ஏ.ஆர்.ரகுமானும் மேடையில் ஒன்றாக கலந்துரையாடினர். இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமான், தான் 33 வருடத்திற்கு முன்பு இசைஞானியுடன் மாணவனாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.