சூப்பர்..ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமான் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! எதைப்பற்றி தெரியுமா? செம குஷியான ரசிகர்கள்!!

சூப்பர்..ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமான் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! எதைப்பற்றி தெரியுமா? செம குஷியான ரசிகர்கள்!!


ar-rahman-announcement-about-99songs-movie-release-in-o

தமிழ் சினிமாவில் ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர் ரகுமான். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் செம ஹிட்டானது. பின்னர் அவர் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிளிலும், ஏராளமான படங்களுக்கு இசையமைத்து  தற்போது இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராக உள்ளார். மேலும் இவர் ஆஸ்கார் உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ளார்.

இந்த நிலையில் தற்போது ஏ.ஆர் ரகுமான் 99 சாங்க்ஸ்  என்ற படத்துக்கு கதாசிரியராகவும் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். மேலும் அப்படத்திற்கு அவரே இசை அமைத்துள்ளார். 99 சாங்ஸ் திரைப்படம் கடந்த மாதம் ரிலீசாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் படம் ரிலீசான ஒரு சில நாட்களிலேயே கொரோனோ தாக்கத்தின் காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டது.

AR Rahmanஇதனால் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்த நிலையில், 99 சாங்ஸ் திரைப்படம் ஓடிடியில் ரிலீசாவது குறித்த தகவலை ஏ ஆர் ரகுமான் இன்று மாலை 6.30 மணியளவில் அறிவிக்க உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் ஏ ஆர் ரகுமானின் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.