
AR Rahman angry on vairamuthu
கடந்த சில தினங்களாக சில பிரபலங்கள் மீது, பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பாடகி சின்மயி செய்திகளை வெளியிட்டு வருகிறார்.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என பரபரப்பான குற்றச்சாட்டை பாடகி சின்மயி கூறினார்.
வைரமுத்து மீதான புகார்களை கேட்டு அதிர்ச்சியில் இருந்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். பெண்கள் பலரையும் ஏ.ஆர்.ரஹ்மானிடம் அறிமுகம் செய்து வைப்பதாக கூறியே வைரமுத்து இச்செயலில் ஈடுபட்டு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தனை கேள்விப்பட்டதும் கோபத்தில் இருக்கும் ரஹ்மான், வைரமுத்து போனில் அழைத்த போதும் பேச மறுத்து விட்டதாக கூறப்படுகிளிராது. தற்போதைய சூழலில் சர்ச்சைக்குரிய வைரமுத்துவிடம் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று ரஹ்மான் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகர்கள் பிரபல இசைப்பிரபலத்தின் பெயரை வைத்து வைரமுத்து இவ்வாறு நடந்துகொண்டது வருத்தமளிக்கிறது எனவும் சமூகவலைத்தளங்களில் கூறிவருகின்றனர்.
Advertisement
Advertisement