
Summary:
A.R Raguman and sarukhan
ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டி வரும் நவம்பர் மாதம் 28-ம் தேதி ஒரிசா மாநிலம் புவனேஷ்வரில் தொடங்கவுள்ளது.
ஒடிசாவில் ஹாக்கி உலகக்கோப்பை நடப்பதைப் பிரபலப்படுத்த ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரு பாடல் ஒன்றை வெளியிட ஒரிசா அரசு முடிவு செய்தது. இந்திப் பாடலாசிரியர் குல்சார் பாடல் வரிகளில் ரகுமான் இசையமைத்துள்ள இப்பாடலுக்கான இசை வீடியோவை ரகுமானே இயக்குகிறார்.
‘ஜெய் ஹிந்த் ஜெய் இந்தியா’ எனத் தொடங்கும் அந்தப் பாடலில் இந்தி நடிகர் ஷாருக் கான் நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு புவனேஷ்வரில் சமீபத்தில் நடந்தது. ஏ.ஆர்.ரகுமான் இயக்கத்தில் முதன்முறையாக நடித்ததை மகிழ்வாகப் பகிர்ந்து வருகிறார் ஷாருக்கான்.
Advertisement
Advertisement