சினிமா

விஜய்? அஜித்? AR முருகதாஸின் அடுத்த படம் குறித்து வெளியான புது அப்டேட்! குஷியில் ரசிகர்கள்.

Summary:

AR Murugadoss next movie updates

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகில் பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் AR முருகதாஸ். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து தர்பார் படத்தை இயக்கிவருகிறார். படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கின்றார். படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிவடைய உள்ளதை அடுத்து முருகதாஸின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரபல தயாரிப்பு நிறுவனமான லிப்ரா புரொடக்ஷன் நிறுவனம் ஏஆர் முருகதாஸ் அவர்களிடம் இருந்து ஒரு அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளது. நிச்சயம் அது முருகதாஸின் அடுத்த படத்தின் அறிவிப்பாகத்தான் இருக்கும் என்கிறார்கள் ரசிகர்கள்.

இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு விவாதங்கள் நடைபெறுகிறது. முருகதாஸ் அடுத்ததாக தல அஜித்தை இயக்க உள்ளார் என அஜித் ரசிகர்களும், கட்டாயம் அடுத்தது விஜய்யுடன் துப்பாக்கி 2 ஆகத்தான் இருக்கும் என விஜய் ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement