மீண்டும் கூடிய எடை! ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய அனுஷ்கா! வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ!!

மீண்டும் கூடிய எடை! ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய அனுஷ்கா! வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ!!


anushka-shetty-latest-video-viral-9A975G

தமிழ் சினிமாவில் மாதவன் நடிப்பில் வெளிவந்து வரவேற்பை பெற்ற ரெண்டு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா. அதனை தொடர்ந்து மக்களிடையே பிரபலமான அவர் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் அருந்ததி, ருத்ரமாதேவி, பாகமதி என ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலும் நடித்துள்ளார்.

இவரது நடிப்பில் வெளிவந்த பாகுபலி படம் செம ஹிட்டானது அனுஷ்கா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்துக்காக தனது உடல் எடையை ஏற்றினார். மேலும் அதனை குறைக்க முடியாமல் பெருமளவில் சிரமப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து இடையில் அனுஷ்கா பல உடற்பயிற்சிகள், சிகிச்சைகளை மேற்கொண்டு உடல் எடையை குறைத்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் தற்போது அனுஷ்கா மீண்டும் உடல் எடை அதிகரித்து அடையாளமே தெரியாமல் மாறியுள்ளார். இந்த நிலையில் அவரது லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வருகிறது.