சினிமா

படுக்கை அறையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அனுபமா! அதிர்ச்சியில் ரசிகர்கள்

Summary:

Anupama released photo from bed

பிரேமம் படம் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற மூன்று கதாநாயகிகளில் ஒருவர் அனுபமா பரமேஸ்வரனும். மற்ற இரண்டு நடிகைகளும் தமிழ், மலையாளம் ஆகியவற்றில் தற்போது கவனம் செலுத்தி நடித்து வருகின்றனர். 

ஆனால் அனுபமா பரமேஸ்வரன் தமிழில் தனுஷுடன் கொடி படத்தில் மட்டுமே நடித்தார். அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களாக தெலுங்கு திரையுலகிலேயே நிரந்தரமாக தங்கிவிட்டார்.

இந்நிலையில் துல்கர் சல்மான் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படம் ஒன்றில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார் அனுபமா. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து கொண்டே உதவி இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார். இந்த படத்தினை அறிமுக இயக்குனர் ஷம்சு சாய்பா இயக்குகிறார்.

நடிப்பு மற்றும் உதவி இயக்குனர் என ஓயாமல் உழைத்து வந்த அனுபமாவிற்கு தற்போது காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதனை தனது ரசிகர்களுக்கு தெரியப்படுத்த அனுபமா உடலை முழுவதும் போர்த்தி முகம் மட்டும் தெரியும் படி படுக்கையில் இருந்தவாறு புகைப்படம் எடுத்துள்ளார். 

View this post on Instagram

Fever face 🤒

A post shared by anupamaparameswaran (@anupamaparameswaran96) on


அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அனுபமா 'காய்ச்சல் முகம்' என பதிவிட்டுள்ளார். இதனைத் கண்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் அனுபமா விரைவில் குணமடைவீர் என நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement