"என்ன மன்னிச்சிருங்க., நான் பெரிய தப்புபண்ணிட்டன்" - மனம் உருகி மேடையிலேயே மன்னிப்பு கேட்ட அனுபமா..! இதுதான் காரணமா?..!!

"என்ன மன்னிச்சிருங்க., நான் பெரிய தப்புபண்ணிட்டன்" - மனம் உருகி மேடையிலேயே மன்னிப்பு கேட்ட அனுபமா..! இதுதான் காரணமா?..!!


Anupama apologise to Karthikeya director

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் மலையாளத்தில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான "பிரேமம்" படத்தில் நடித்து பிரபலமடைந்தார்.

இந்த படம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தார். தெலுங்கில் இவர் பல படங்களில் பிஸியாக நடித்து வந்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் வெளியான "தள்ளிபோகாதே" என்ற படத்தில் நடித்திருந்தார.

Kartikeya 2

மேலும் கார்த்திகேயா 2 என்ற படத்திலும் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இப்படத்தின் வெற்றிவிழா ஹைதராபாத்தில் நடந்த நிலையில், பட குழுவினருடன் நடிகை அனுபவ பரமேஸ்வரனும் கலந்து கொண்டார்.

Kartikeya 2

அவர் மேடையில் பேசும்போது, "இப்படத்தின் சூட்டிங் குஜராத்தில் நடக்கும்போது எனக்கு காயம் ஏற்பட்டது. இதனால் கடுமையான முதுகு வலியால் அவதிப்பட்டேன். அந்த ஷெட்யூலின் கடைசி நாளில் தொழில்நுட்ப பிரச்சனையால் படப்பிடிப்பு தடைப்பட்டதால், எனக்கு கோபம் வந்துவிட்டது. 

இதற்காக இயக்குனரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு அதுதான். இந்த படத்தில் சிறந்த கதாபாத்திரத்தை இயக்குனர் எனக்கு கொடுத்ததற்கு மிக்க நன்றி" எனக் கூறியிருந்தார்.