அப்போல்லாம் பஞ்சாயத்துல டிவி ஓடுனுச்சு.! ஆனால் இப்போ...? ஆன்டி இண்டியன் வேற லெவல் அசத்தல் ட்ரைலர்.!

அப்போல்லாம் பஞ்சாயத்துல டிவி ஓடுனுச்சு.! ஆனால் இப்போ...? ஆன்டி இண்டியன் வேற லெவல் அசத்தல் ட்ரைலர்.!



anti-indian-triler


திரைப்படத்துறையில் நீண்ட அனுபவம் பெற்ற மாறன் யூடுபில் தமிழ் டாக்கிஸ் எனும் சேனல் வைத்து திரைப்படங்களுக்கு விமர்சனம் கொடுத்து வந்தார். யூடிப் சினிமா விமர்சகராக மாறிய புளு சட்டை மாறன் அனைத்து படங்களுக்கும் தாறுமாறாக விமர்சனம் கொடுப்பார். திரைப்படங்களை விமர்சனம் செய்ததன் மூலம் பிரபலமான ப்ளூ சட்டை மாறன் முதன்முறையாக இயக்கியுள்ள திரைப்படம் "ஆன்டி இண்டியன்".

இப்படத்தின் அனைத்து பணிகளும் முன்னரே நிறைவடைந்துவிட்ட நிலையிலும், படத்திற்கு சென்சார் சான்றிதழ் தர தணிக்கை துறையினர் மறுத்ததால் இப்படத்தின் ரிலீஸில் சிக்கல் எழுந்தது. இந்தநிலையில், தற்போது படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்த நிலையில், படத்தின் ட்ரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. 


ப்ளூ சட்டை மாறனின் தமிழ் டாக்கீஸ் யூடியூப் சேனலில் இந்த ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரைலரை பார்க்கும்போது மதவாதிகள் பண்ணும் அரசியலை நகைப்பூட்டும் வகையில் படமாக்கியிருக்கிறார் என்பது தெரிகிறது. மேலும், இந்த ட்ரைலரில் வரும் டைலாக், முன்னாடியெல்லாம் டூர்தர்சன் அப்டின்னு ஒரே ஒரு சேனல் இருக்கும்.. அதுவும் ஊர் பஞ்சாயத்துல ஓடிக்கிட்டு இருக்கும். இப்போ ஊறுபட்ட சேனல் இருக்கு.. எல்லாத்துலயும் வெறும் பஞ்சாயத்து மட்டும் தான் ஓடிக்கிட்டு இருக்கு" அப்டினு வசனம் வச்சுருக்காங்க. இந்த ட்ரைலர் தற்போது வைரல் ஆகி வருகிறது.