நெட்பிளிக்ஸில் வெளியானது அன்னபூரணி திரைப்படம்; வீக்கெண்ட் மூவி லிஸ்டில் ஆட் பண்ணிக்கோங்க.!

நெட்பிளிக்ஸில் வெளியானது அன்னபூரணி திரைப்படம்; வீக்கெண்ட் மூவி லிஸ்டில் ஆட் பண்ணிக்கோங்க.!



  Annapoorani Movie now Streaming on Netflix OTT 

 

இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டு, நாயகியாக தொடர்ந்து ஜொலித்து வருகிறார். இவருக்கென இருக்கும் ரசிகர்கள் கூட்டம் ஏராளம். 

கடந்த சில ஆண்டுகளாகவே நயன்தாரா பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வழங்கும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இதில் கோலமாவு கோகிலா, மூக்குத்தி அம்மன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்று இருந்தன. 

சமீபத்தில் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், தமன் இசையில், நடிகர்கள் நயன்தாரா, ஜெய், கார்த்திக் குமார், சத்யராஜ், பூர்ணிமா ரவி உட்படட பலரின் நடிப்பில் வெளியான திரைப்படம் அன்னபூரணி. இப்படத்தின் மீது கலவையான விமர்சனம் முன்வைக்கப்பட்டது. 

cinema news

ஆனால், திரையரங்கில் நேரில் சென்று பார்த்த ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் ஓடிடி வெளியீடு உரிமைகளை முன்னதாகவே நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருந்தது. .

இந்நிலையில், அன்னபூரணி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. நெட்பிளிக்ஸ் சந்தாதாரர்கள் இப்படத்தை கண்டு மகிழலாம். எதிர்வரும் சனி மற்றும் ஞாயிறு விடுமுறையில் நல்ல படம் பார்க்க வேண்டும் என நினைப்போர், அன்னப்பூரணியை தேர்வு செய்யலாம்.