சினிமாவிற்கு வருவதற்கு முன் கல்யாண கச்சேரியில் கீபோர்ட் வாசித்த அனிருத்..! வைரலாகும் வீடியோ..!

சினிமாவிற்கு வருவதற்கு முன் கல்யாண கச்சேரியில் கீபோர்ட் வாசித்த அனிருத்..! வைரலாகும் வீடியோ..!


aniruth-playing-key-board-in-marriage-function-8-years

இன்று இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் இசை அமைப்பாளர்களில் ஒருவரான அனிருத், 8 வருடத்திற்கு முன் கல்யாண கச்சேரி ஒன்றில் கீபோர்ட் வாசிக்கும் வீடியோ ஓன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.

தனுஷ் நடித்த 3 என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இந்த படத்தில் இவர் இசை அமைத்த அனைத்து பாடல்களுமே மாபெரும் வெற்றிபெற்றது. அதிலும் குறிப்பாக, ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகளவில் மாபெரும் வெற்றிபெற்றது.

aniruth

இதனை அடுத்து இந்திய அளவில் பிரபலமான அனிருத் ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் என தமிழ் சினிமாவின் அணைத்து முன்னணி நடிகர்களின் படங்களில் இசை அமைப்பாளராக பணியாற்றிவருகிறார். இன்று பல கோடிகளில் சம்பளம் வாங்கி, புகழின் உச்சத்தில் இருக்கும் அனிருத் 8 வருடத்திற்கு முன் திருமண கச்சேரி ஒன்றில் கீபோர்ட் வாசிக்கும் வீடியோ ஓன்று தற்போது வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள அனிருத், “8 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு திருமண கச்சேரி ஒன்றில் கீபோர்டு வாசிக்கும் வீடியோ இது.. இந்த வீடியோவை உருவாக்கிய நபருக்கு நன்றி.. மனதை மிகவும் கவர்ந்துள்ளது!” என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இதோ அந்த வீடியோ.