சினிமா

16 வயசு பொண்ணுகிட்ட இப்படியா கேட்பது? அதுக்கு அஜித்தின் ரீல் மகளின் பதிலை பார்த்தீர்களா!!

Summary:

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது நடிகைகளுக்கு இணையாக முன்னணி நடிகை

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது நடிகைகளுக்கு இணையாக முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் அனிகா. இவர் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு மகளாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் நானும் ரவுடி தான், மிருதன், பாஸ்கர் தி ராஸ்கல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அனிகா விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாராவின் 
மகளாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து மலையாள மொழியிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் அனிகா அவ்வபோது லேட்டஸ்ட் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்.

இந்நிலையில் அனிகாவின் புகைப்படத்தை கண்ட நெட்டிசன் ஒருவர், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டுள்ளார். அதற்கு அவர் duh என பதிலளித்துள்ளார்.


Advertisement